தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 July 2020 11:32 PM GMT (Updated: 2020-07-04T05:02:16+05:30)

தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பூர்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி உத்தரவின்பேரில் நேற்று தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமை தாங்கினார். பெட்ரோல் விலை உயர்வால் இனி மோட்டார் சைக்கிள்களில் செல்ல முடியாது என்பதை குறிக்கும் விதமாக மோட்டார்சைக்கிளுக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெரம்பூர், ஆர்.கே.நகர் மற்றும் திரு.வி.க. நகர் தொகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.

Next Story