குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி சந்தை ரோடு மற்றும் முக்குளம் வழியாக செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள முத்துசேர்வாமடம் கிராம சாலை கரடுமுரடாக உள்ளது.
மீன்சுருட்டி,
முத்துசேர்வாமடம் கிராமம் வரை சுமார் 10-க்கு மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கி விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. எனவே உடனடியாக அங்கு புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது கடந்த ஒரு வாரமாக இந்த பகுதியில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் இந்த சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக மாறி பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வயதான முதியோர் மற்றும் இந்த வழியாக செல்லும் புதியவர்கள் மழைநீர் பள்ளங்களில் உள்ள சகதியில் விழுந்து காயங்களுடன் உயிர் பிழைத்து செல்கின்றனர்.
முத்துசேர்வாமடம் கிராமம் வரை சுமார் 10-க்கு மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கி விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. எனவே உடனடியாக அங்கு புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story