மெட்ரோ ரெயில் சுரங்கம் அமைக்கும் பணி: சென்டிரல் ரெயில் நிலைய சாலையில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரெயில் சுரங்கம் அமைக்கும் பணிக்காக, சென்டிரல் ரெயில் நிலைய சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
சென்னை,
சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் முன்பு சுரங்கப்பாதை கட்டுமானப்பணி சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் மூலமாக நடைபெற உள்ளது எனவே நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது. 25-ந்தேதி வரை 15 நாட்களுக்கு கீழ்க்கண்டவாறு அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
*அண்ணாசாலையில் இருந்து பல்லவன் சாலை வழியாக ஈ.வெ.ரா. சாலை வருபவர்கள் தொடர்ந்து இதே சாலையில் செல்லலாம், மாற்றம் இல்லை. சென்டிரல் ரெயில் நிலையம் வருபவர்கள் இப்பாதையை பயன்படுத்தலாம்.
* முத்துசாமி சாலையில் இருந்து அண்ணாசாலை செல்பவர்கள் முத்துசாமி சாலை வழியாக முத்துசாமி பாலம்- வாலாஜா பாயிண்ட் சென்று, அண்ணாசாலையை அடையலாம்.
* ஈவினிங் பஜார் சாலையில் இருந்து அண்ணாசாலை செல்பவர்கள் ஈவினிங் பஜார் சாலை வழியாக இடது புறம் திரும்பி ஈ.வெ.ரா. சாலை சென்று வலது புறம் திரும்பி முத்துசாமி பாலம் -வாலாஜா பாயிண்ட் சென்று அண்ணா சாலையை அடையலாம்.
* ஈவினிங் பஜார் சாலையில் இருந்து சென்டிரல் ரெயில் நிலையம் முன்பாக உள்ள ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக அண்ணாசாலை செல்ல இயலாது.
* வால்டாக்ஸ் சாலையில் இருந்து அண்ணாசாலை செல்பவர்கள் இடதுபுறம் திரும்பி ஈ.வெ.ரா. சாலை சென்று வலது பக்கம் திரும்பி முத்துசாமி பாலம் வழியாக வாலாஜா பாயிண்ட் சென்று, அண்ணா சாலையை அடையலாம். சென்டிரல் ரெயில் நிலையம் முன்பு உள்ள ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக அண்ணாசாலை செல்ல இயலாது.
* முத்துசாமி சாலையிலிருந்து ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக பல்லவன் சாலை செல்ல இயலாது.
இந்த தற்காலிகமான போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேற்கண்ட தகவல் சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story