மாவட்ட செய்திகள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது + "||" + Youth arrested for raping minor girl

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தேனி,

தேனி அருகே உள்ள கோட்டூர், பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன்(வயது28). இவர் மேடை அலங்கார தொழில் செய்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரெங்கநாதனுக்கு வேறு ஒரு பெண்னை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இதனால் மனமுடைந்த சிறுமி தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து சிறுமியை அவரது குடும்பத்தினர் மீட்டு சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் தேனி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்திலகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரெங்கநாதனை கைது செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேன்கனிக்கோட்டை அருகே அ.தி.மு.க. கொடி கம்பத்தை சேதப்படுத்திய ஊராட்சி செயலாளர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே அ.தி.மு.க. கொடி கம்பத்தை சேதப்படுத்திய ஊராட்சி செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
2. கன்னியாகுமரியில் அரிவாளை காட்டி பணம் கேட்டு மதுபாரில் ரகளை 3 பேர் கைது
கன்னியாகுமரியில் மதுபாரில் அரிவாளை காட்டி பணம் கேட்டு ரகளை செய்த சென்னையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. கும்பகோணத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் 50 பேர் கைது
கும்பகோணத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. சீர்காழியில், தலைமை ஆசிரியர் மனைவி கொலை: விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி, கள்ளக்காதலியுடன் கைது
சீர்காழியில், தலைமை ஆசிரியர் மனைவி இரும்பு பைப்பால் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி, கள்ளக்காதலியுடன் கைது செய்யப்பட்டார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அடித்துக்கொன்றதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
5. வலிவலம் போலீஸ் நிலையம் முன்பு ரவுடியிசம் செய்ய வேண்டும் என வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
நாகை அருகே வலிவலம் போலீஸ் நிலையம் முன்பு ரவுடியிசம் செய்ய வேண்டும் என வீடியோ வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை