வெளி மாவட்ட நெல்லை கொள்முதல் செய்வதை கைவிடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் கோடை சாகுபடி அறுவடை முடிவடைந்த நிலையில் சுமார் 60-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
திருவாரூர்,
கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் வெளி மாவட்டங்களில் இருந்து நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.
இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல்லை கொள்முதல் செய்வதை கைவிடக்கோரி திருவாரூர் நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நலச்சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சேதுராமன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். சங்க பொருளாளர் முருகேசன், நிர்வாகிகள் பாலகுமாரன், துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story