தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி; செவிலியர் உள்பட 53 பேருக்கு பாதிப்பு


தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி; செவிலியர் உள்பட 53 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 14 July 2020 11:45 PM GMT (Updated: 14 July 2020 11:45 PM GMT)

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 26 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

தேனி,

இறந்தவர்களில் ஒருவர் போடி உசேன் தெருவை சேர்ந்த 54 வயது தொழிலாளி, மற்றொருவர் கம்பத்தை சேர்ந்த 69 வயது முதியவர், தேனி என்.ஆர்.டி. நகரை சேர்ந்த 65 வயது மூதாட்டி, உத்தமபாளையம் அருகேயுள்ள ஆங்கூர்பாளையத்தை சேர்ந்த 45 வயது ஆண். இதனால், கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உத்தமபாளையத்தில் தனிப்பிரிவு போலீஸ்காரர், காமயகவுண்டன்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர் உள்பட 2 பேர், பெரியகுளத்தில் 9 பேர், சிந்துவார்பட்டியில் 5 பேர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

ஆண்டிப்பட்டியில் 3 பேருக்கும், போடிதாசன்பட்டியில் 2 பேருக்கும், பிச்சம்பட்டி, பூமலைக்குண்டு, பண்ணைப்புரம், அரண்மனைப்புதூர், தேவதானப்பட்டி, வயல்பட்டி, தேனி ரத்தினம் நகர், போடி, பழனிசெட்டிபட்டி, டொம்புச்சேரி ஆகிய ஊர்களில் தலா ஒருவருக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கம்பத்தில் 5 பேருக்கும், சின்னமனூரில் 9 பேருக்கும், முத்துலாபுரத்தில் 2 பேருக்கும், வீரபாண்டியில் 3 பேருக்கும், கூடலூரில் 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,916 ஆக அதிகரித்துள்ளது.

Next Story