திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 342 ஆக உயர்வு


திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 342 ஆக உயர்வு
x
தினத்தந்தி 16 July 2020 5:32 AM IST (Updated: 16 July 2020 5:32 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 25 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 342 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர்,

இந்தியாவில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதிலும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

அதன்படி தற்போது தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தையும் கடந்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 4 ஆயிரத்து 496 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு இருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

342 ஆக உயர்வு

இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் தளி அருகே உள்ள திருமூர்த்திநகரை சேர்ந்த 32 வயது ஆண், 37 வயது பெண், 60 வயது பெண், சின்னக்கரை கரைப்புதூரை சேர்ந்த 49 வயது ஆண், தென்னம்பாளையம் ஆர்.வி.இ. லே அவுட்டை சேர்ந்த 38 வயது ஆண், காந்திநகர் ஜீவாகாலனியை சேர்ந்த 52 வயது ஆண், முருகம்பாளையம் பகவதிநகரை சேர்ந்த 55 வயது ஆண், கொங்குமெயின்ரோட்டை சேர்ந்த 25 வயது பெண், 13 வயது பெண், 42 வயது ஆண், பொங்கலூர் ஏ.டி. காலனியை சேர்ந்த 23 வயது ஆண், பல்லடம் பூமலூரை சேர்ந்த 45 வயது ஆண், பாளையக்காட்டை சேர்ந்த 70 வயது ஆண், யுனிவர்செல் ரோட்டை சேர்ந்த 65 வயது ஆண், 55 வயது பெண், தாராபுரம் ஜமால்புதூர் தெருவை சேர்ந்த 68 வயது ஆண், 55 வயது பெண், திருநீலகண்டபுரத்தை சேர்ந்த 57 வயது பெண், வடுகபாளையத்தை சேர்ந்த 28 வயது ஆண், பி.என். ரோட்டை சேர்ந்த 14 வயது சிறுவன், காங்கேயம் காடையூரை சேர்ந்த 27 வயது பெண், திருப்பூர் கல்லூரி சாலையை சேர்ந்த 33 வயது ஆண், மங்கலம் ரோட்டை சேர்ந்த 33 வயது ஆண், 30 வயது பெண், காங்கேயம் ரோட்டை சேர்ந்த 50 வயது பெண் ஆகிய 25 பேர் ஆவர். இவர்கள் அனைவருக்கும் மேல்சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கும் சளி மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 342 ஆக உயர்ந்துள்ளது.

Next Story