தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. தலைமையில் குற்றத்தடுப்பு நடவடிக்கை கலந்தாய்வு கூட்டம்


தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. தலைமையில் குற்றத்தடுப்பு நடவடிக்கை கலந்தாய்வு கூட்டம்
x
தினத்தந்தி 16 July 2020 1:36 AM GMT (Updated: 16 July 2020 1:36 AM GMT)

தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. தலைமையில் குற்றத்தடுப்பு நடவடிக்கை கலந்தாய்வு கூட்டம்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில், குற்றத்தடுப்பு நடவடிக்கை தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. முருகன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துச்சாமி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர். அப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை ஐ.ஜி. ஆய்வு செய்தார்.

மேலும் கொள்ளை, கொலை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் நிகழாமல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்களுடன், போலீசார் எப்போதும் நல்லுறவை பேண வேண்டும். கொரோனா தடுப்பு பணிக்காக ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தொற்று ஏற்படாமல் தற்காத்து கொள்ள வேண்டும் என்று ஐ.ஜி. முருகன் அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து முக்கிய குற்றவழக்குகளில் தொடர்புடைய நபர்களை கைது செய்த போலீஸ் அதிகாரிகள், போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 

Next Story