தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி 2 டாக்டர்கள் உள்பட 59 பேருக்கு பாதிப்பு


தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி 2 டாக்டர்கள் உள்பட 59 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 16 July 2020 8:25 AM IST (Updated: 16 July 2020 8:25 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர். 2 டாக்டர்கள் உள்பட மேலும் 59 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தேனி,

தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரசால் 1,916 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போடியை சேர்ந்த 42 வயது ஆண், கம்பத்தை சேர்ந்த 72 வயது முதியவர் ஆகிய 2 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்து உள்ளது.

59 பேருக்கு பாதிப்பு

அதுபோல், தேனி அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி டாக்டர், ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் பெண் டாக்டர், சின்னமனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தென்கரை, ஜெயமங்கலம் போலீஸ் நிலையங்களில் தலா ஒரு போலீசார், தேனி அல்லிநகரம் நகராட்சி ஊழியர்கள் 2 பேர் ஆகியோர் உள்பட நேற்று ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஆண்டிப்பட்டி பகுதியில் 4 பேர், போடியில் 10 பேர், சின்னமனூரில் 5 பேர், கம்பத்தில் 4 பேர், வருசநாட்டில் 2 பேர், பெரியகுளம் பகுதியில் 11 பேர், தேனி ஒன்றிய பகுதியில் 18 பேர், உத்தமபாளையத்தில் 5 பேர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,975 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story