மாவட்ட செய்திகள்

நீலகிரியில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு 277 ஆக உயர்வு + "||" + Corona outbreak rises to 277 for 25 more in the Nilgiris

நீலகிரியில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு 277 ஆக உயர்வு

நீலகிரியில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு 277 ஆக உயர்வு
நீலகிரியில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு 277 ஆக உயர்ந்து உள்ளது.
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 258 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில் 6 பேரின் பெயர்கள் வெளி மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு 252 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 25 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஊட்டி நகராட்சி தாசப்பிரகாஷ் சாலையைச் சேர்ந்த ஒரு ஆண், குன்னூர் நகராட்சி வள்ளலார் நகரைச் சேர்ந்த ஒரு ஆண், குன்னூர் காந்திபுரத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன், விநாயகர் கோயில் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண், ஆர்.சி. காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண், பார்சைடு எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண், ஹேர்வுட்குடியிருப்பை சேர்ந்த ஒரு ஆண், குன்னூர் ஒசட்டியை சேர்ந்த இரண்டு ஆண்கள், ஓட்டு பட்டறை சேர்ந்த ஒரு சிறுமி,


அப்பர் சர்ச் சாலையைச் சேர்ந்த ஒரு ஆண், குன்னூர் பெட்போர்டு பகுதியை சேர்ந்த 2 ஆண்கள், குன்னூர் டைகர் ஹில்லை சேர்ந்த ஒரு ஆண், வண்டிசோலையை சேர்ந்த ஒரு பெண், காமராஜபுரத்தை சேர்ந்த ஒரு பெண், தொரையட்டியை சேர்ந்த ஒரு மூதாட்டி, அதிகரட்டியை சேர்ந்த ஒரு பெண், ஒரு ஆண், அத்திக்கல்லை சேர்ந்த 85 வயதான முதியவர், முட்டி நாடை சேர்ந்த மூதாட்டி, தங்காடு கிராமத்தை சேர்ந்த 67 வயதான மூதாட்டி, ஊட்டி அன்பு அண்ணா காலனியைச் சேர்ந்த 64 வயதான முதியவர், பில்லிக் பையை சேர்ந்த ஒரு ஆண் ஆகியோருக்கு தொற்று உறுதியானது.

277 ஆக உயர்வு

ஐக்கிய அரபு நாட்டில் இருந்து குன்னூர் வெலிங்டன் அந்த 39 வயதான பெண்ணுக்கு பரிசோதனை செய்ததில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு 277 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 107 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 169 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார். குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் டாக்டர் ஒருவருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில் வைரஸ் தொற்று உறுதியானது. ஊட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் மண்டல துணை மேலாளராக பணிபுரிந்து வரும் ஒரு பெண் மதுரையில் இருந்து ஊட்டிக்கு வந்தார். அவரிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவில் இருந்து விரைவாக விடுபட வேண்டும் என்றால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் - உலக சுகாதார அமைப்பு
கொரோனாவில் இருந்து விரைவாக விடுபட வேண்டும் என்றால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 425 பேர் பாதிப்பு சாவு எண்ணிக்கை 302 ஆக உயர்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 425 பேர் பாதிக்கப்பட்டனர். 8 பேர் பலியானதால் சாவு எண்ணிக்கை 302 ஆக உயர்ந்தது.
3. கொரோனாவுக்கு முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட மேலும் 5 பேர் சாவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆனது
புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் புதிதாக 268 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆனது.
4. உரம் வாங்க நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் விவசாயிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் கொரோனா பரவும் அபாயம்
விவசாயத்துறை மந்திரியின் சொந்த மாவட்டமான ஹாவேரியில் உரம் வாங்க விவசாயிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
5. கர்நாடகத்தில் புதிய உச்சம் தொட்ட பாதிப்பு ஒரேநாளில் 7,178 பேருக்கு வைரஸ் தொற்று 93 பேர் உயிரிழப்பு
கர்நாடகத்தில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 7,178 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று கொரோனாவுக்கு 93 பேர் பலியாகி உள்ளனர். அதே வேளையில் 5 ஆயிரம் பேர் குணமாகி வீடு திரும்பினர்.