திருப்பூர் மாவட்டத்தில் நில வருவாய் ஆய்வாளர் உள்பட 39 பேருக்கு கொரோனா


திருப்பூர் மாவட்டத்தில் நில வருவாய் ஆய்வாளர் உள்பட 39 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 July 2020 12:21 AM GMT (Updated: 2020-07-17T05:51:36+05:30)

திருப்பூர் மாவட்டத்தில் நில வருவாய் ஆய்வாளர் உள்பட 39 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 381 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த 48 வயதான நில வருவாய் ஆய்வாளர் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்தேகமடைந்த அவரின் சளி மற்றும் ரத்த மாதிரி மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் மாநகராட்சி ஊழியர்கள் வடக்கு தாலுகா அலுவலகத்திற்கு சென்று வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளித்தனர். மேலும், அங்கு பிளச்சிங் பவுடர்களும் தூவப்பட்டன. இதுபோல் அவர் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் மருந்துகள் தெளிக்கப்பட்டது.தற்போது நிலவருவாய் ஆய்வாளர் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

381 ஆக உயர்வு

இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-

திருப்பூரில் நேற்று மட்டும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பல்லடம் பருவாய் பகுதியை சேர்ந்த 57 வயது ஆண், திருப்பூர் கே.செட்டிபாளையத்தை சேர்ந்த ஒரு வயது சிறுமி, 22 வயது பெண், 42 வயது ஆண், கல்லூரி ரோடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த 48 வயதான நில வருவாய் ஆய்வாளர், அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 23 வயது பெண், 26 வயது ஆண், 65 வயது ஆண், 40 வயது பெண், 19 வயது ஆண், 15 வயது சிறுவன், பி.என்.ரோடு நெசவாளர் காலனியை சேர்ந்த 30 வயது ஆண், டி.என்.கே. புரத்தை சேர்ந்த 48 வயது ஆண், உடுமலை பெரியகோட்டை பிரிவை சேர்ந்த 65 வயது ஆண், 38 வயது ஆண், உடுமலை தில்லை நகரை சேர்ந்த 38 வயது ஆண், உடுமலை சங்கர்நகரை சேர்ந்த 13 வயது சிறுவன், 17 வயது சிறுமி, 39 வயது பெண், உடுமலை திருமூர்த்திமலை ரோட்டை சேர்ந்த 65 வயது ஆண்.

திருப்பூர் எஸ்.வி.காலனியை சேர்ந்த 60 வயது பெண், 39 வயது ஆண், 38 வயது பெண், 18 வயது பெண், 32 வயது ஆண், 20 வயது பெண், 10 வயது சிறுவன், 5 வயது சிறுமி, 3 வயது சிறுமி, 20 வயது பெண், வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 39 வயதான போலீஸ்காரர், திருப்பூர் ஓம்சக்தி கோவில் தெருவை சேர்ந்த 46 வயது பெண், மூலனூர் தலக்கரையை சேர்ந்த 1 வயது சிறுவன், 26 வயது பெண், 33 வயது ஆண், திருமுருகன்பூண்டியை சேர்ந்த 31 வயது பெண், 41 வயது ஆண், தாராபுரம் பெரியார்நகரை சேர்ந்த 6 வயது சிறுவன், பெருமாநல்லூர் ஆர்.பி.எஸ்.நகரை சேர்ந்த 41 வயது பெண் ஆகிய 39 பேர் ஆவர்.

இவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 381 ஆக உயர்ந்துள்ளது.

Next Story