ஊழியருக்கு கொரோனா பாதிப்பு: ஊட்டி ஸ்டேட் வங்கி மூடல்
ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தடுப்பு நடவடிக்கையாக ஊட்டியில் ஸ்டேட் வங்கி மூடப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஊட்டி கூட்செட் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் மண்டல துணை பெண் மேலாளர் ஒருவர் விடுமுறை எடுத்து மதுரைக்கு சென்று இருந்தார். அவர் சமீபத்தில் பணிக்கு திரும்பி வந்த போது, அவரிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கொரோனா தொற்று உறுதியானது. அவர் ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே அவர் தான் பணிபுரியும் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் நடந்த கூட்டத்திலும் கலந்துகொண்டு உள்ளார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் அலுவலக ஒரு பிரிவில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.
கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் மூடப்பட்டது. அங்கு பணிபுரிந்து வந்த அலுவலர்கள், ஊழியர்கள் 20 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த அலுவலகம் அருகே உள்ள குடோனுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. தடுப்பு நடவடிக்கையாக லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
ஸ்டேட் வங்கி மூடல்
ஊட்டி ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கடந்த 10-ந் தேதி ஊட்டி அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டார். அவரிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதித்ததில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் முடிவு நேற்று கிடைக்கப் பெற்றது. அதனைத் தொடர்ந்து உடனடியாக ஸ்டேட் வங்கி மூடப்பட்டது. முன்புறம் உள்ள ஏ.டி.எம். மையமும் அடைக்கப்பட்டது. வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள வங்கி மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடையணிந்து வங்கி அலுவலகம் மற்றும் வளாகத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர். வங்கி ஊழியருக்கு தொற்று உறுதியானதால், அவருடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் மற்றும் வங்கிக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. இதை அடுத்து ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது. வங்கி மற்றும் ஏ.டி.எம். மையம் நாளை (சனிக்கிழமை) வரை மூடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

Related Tags :
Next Story