சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 95.65 சதவீதம் தேர்ச்சி - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தகவல்


சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 95.65 சதவீதம் தேர்ச்சி - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 17 July 2020 1:29 PM IST (Updated: 17 July 2020 1:29 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 95.65 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பாலுமுத்து கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் 95.65 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 6 ஆயிரத்து 711 மாணவர்களும், 8 ஆயிரத்து 777 மாணவிகளும் சேர்த்து மொத்தம் 15ஆயிரத்து 488 பேர் தேர்வு எழுதினர்.

இவர்களில் 6 ஆயிரத்து 292 மாணவர்களும், 8 ஆயிரத்து 523 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 815 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தத்தில் இது 95.65 சதவீதமாகும்.

மேலும் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 68 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 37 மெட்ரிக் மற்றும் சுயநிதிபள்ளிகள் 51-ம் சேர்த்து மொத்தம் 156 பள்ளிகள் உள்ளன. இதில் 10 அரசு பள்ளிகளும், 7 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 35 மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளும் சேர்த்து 52 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story