திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நிபந்தனைகள் ஏதுமின்றி அனைத்து வங்கிகளும் புதிய பயிர் கடன்களை வழங்க வேண்டும். பயிர் இன்சூரன்ஸ் தொகை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு கடன் சங்கங்கள் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி திருவாரூர் அருகே தென்னவராயநல்லூரில் மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் இடும்பையன், நிர்வாகிகள் மாதவன், ரகுபதி, ராஜாங்கம், முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தப்பளாம்புலியூரில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு ஒன்றிய செயலாளர் பவுன்ராஜ், கொட்டாரக்குடியில் வேளாண்மை கூட்டுறவு வங்கி சங்கம் முன்பு ஒன்றிய தலைவர் ஜெயபால் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொரடாச்சேரி
கொரடாச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச்செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சீனிவாசன், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதேபோல எண்கண் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத்தலைவர் லோகநாதன் முன்னிலை வகித்தார். மணக்கால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பொருளாளர் செந்தில் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைச்செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். குளிக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் மலர்குமார் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் செல்லதுரை முன்னிலை வகித்தார். எருக்காட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் இலக்குமணன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் லெனின் முன்னிலை வகித்தார்.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். தேவங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய தலைவர் பூசாந்திரம், ஒட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் முனியாண்டி, பூவனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் ஜோசப் ஆகியோர் தலைமை தாங்கினர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தலைக்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பிச்சுமணி, சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் கொருக்கை, கொக்காலடி, பிச்சன்கோட்டகம், ராயநல்லூர், எழிலூர், ஆதிரங்கம், மேட்டுப்பாளையம் ஆகிய 7 இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
குடவாசல்
குடவாசல் அருகே உள்ள பெரும்பண்ணையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் லட்சுமி, மாவட்டக்குழு உறுப்பினர் கெரக்கொரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story