நாகை மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி,
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரியும், அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்கக்கோரியும் கீழையூர் ஒன்றியம் பாலகுறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் ரவி, விவசாய சங்க ஒன்றிய குழு உறுப்பினர்கள் காளிமுத்து, ரத்தினசாமி, அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க தலைவர் சித்தார்த்தன் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
திட்டச்சேரி, திருக்கடையூர்
இதேபோல் விவசாய சங்கம் சார்பில் திட்டச்சேரி அருகே உள்ள ஆதினங்குடி மற்றும் ஏரவாஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பொன்மணி, ஒன்றிய தலைவர் ஸ்டாலின்பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ஜெயபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருக்கடையூரில் உள்ள கூட்டுறவு கடன் சங்கம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய விவசாய சங்க வட்டக்குழு உறுப்பினர் சண்முகம் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் சிம்சன் கலந்து கொண்டு பேசினார். இதில் மாதர் சங்க மாநில துணை தலைவர் கலைச்செல்வி, கிளை செயலாளர் ஜீவானந்தம், கட்சியை சேர்ந்த செல்வம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
சிக்கல்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நாகை ஒன்றியம் சார்பில் சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய சங்க ஒன்றிய தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் கீழ்வேளூர் ஒன்றியம் ஆதமங்கலம் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் முன்பு மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் அம்பிகாபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே மல்லியத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட இணை செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதேபோல மறையூர், உளுத்துக்குப்பை, ஆத்தூர், மணல்மேடு, மாப்படுகை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Tags :
Next Story