ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நர்சு, பிளம்பர்களுக்கு தொற்று மாநகராட்சி பகுதியில் கொரோனா 400-ஐ நெருங்குகிறது
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பணி புரிந்த நர்சு மற்றும் பிளம்பர்களுக்கு தொற்று உறுதியானது. மாநகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்பு 400-ஐ நெருங்குகிறது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படுவேகமாக உயர்ந்து வருகிறது. நாகர்கோவில் நகரில் ஆங்காங்கே ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்பட்டிருந்த கொரோனா தொற்று தற்போது அனைத்து பகுதிகளிலும் பரவி வருகிறது. அதிலும் வடசேரி பஸ் நிலையத்தில் செயல்பட்ட தற்காலிக சந்தையில் காய்கறி வியாபாரிக்கு கொரோனா கண்டறியப்பட்டபிறகு ஏராளமானோர் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
அவர்களில் அங்கு பணியாற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஊர்க்காவல்படையினர், சந்தை வியாபாரிகள், சுமைதூக்கும் பணியாளர்கள், சந்தைக்கு வந்து சென்றவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் நிலையம் மூடல்
இதனால் வடசேரி தற்காலிக சந்தை மூடப்பட்டுள்ளது. வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவக பெண் பணியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அம்மா உணவகமும் மூடப்பட்டது. மற்ற பணியாளர்கள் நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் செயல்பட்ட அம்மா உணவகத்தின் உணவு தயாரிப்பு கூடத்தில் பணியாற்றினர். அங்கும் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அந்த திருமண மண்டபமும் மூடப்பட்டது.
வடசேரி பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும், ஊர்க்காவல் படையினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து வடசேரி போலீஸ் நிலையமும் மூடப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள ஒரு சமுதாய நலக்கூடத்துக்கு போலீஸ் நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டது. நேற்று காலை முதல் அங்கு போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.
பிளம்பர்கள்
நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள சந்தையை சேர்ந்த வியாபாரிகள், டிரைவர்கள், சுமை தூக்கும் பணியாளர்கள் என பலரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதேபோல நகரில் தினந்தோறும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பிளம்பர்கள் 2 பேர் கடந்த சில தினங்களாக பிளம்பிங் வேலைகள் செய்து வந்தனர். இதேபோல் காண்டிராக்டர் ஒருவரும் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில் அவர்கள் 3 பேருக்கும் ஒருவர் விட்டு ஒருவர் என காய்ச்சல் வந்தது.
நர்சு
இதனால் அவர்களுக்கு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர்கள் 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல் ஆஸ்பத்திரியில் பணியாற்றிய நர்சு ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினமும் ஒரு நர்சு கொரோனா தொற்றுக்கு ஆளானார். அவரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தனியார் சந்தை அருகே செயல்பட்டு வந்த வெல்டிங் பட்டறையில் பணியாற்றிய ஒருவருக்கு காய்ச்சல் காரணமாக பரிசோதனை செய்ததில் அவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய வீடு அமைந்துள்ள பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி எதிரே ஒயிட் அவுஸ் தெருவில் உள்ள வீடு தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு, நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அந்த வீடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பகவதிப்பெருமாள் தலைமையில் ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.
400-ஐ நெருங்குகிறது
பிளம்பர்கள், காண்டிராக்டர்கள், நர்சு, வெல்டிங் பட்டறை ஊழியர் ஆகியோரின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பட்டியலை சுகாதாரத்துறையினர் சேகரித்து வருகிறார்கள். கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பிளம்பர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நடந்த பிளம்பிங் வேலை செய்து கொண்டிருந்தபோது பணிகளை பார்வையிட்ட டாக்டர்கள், நர்சுடன் பணியாற்றிய டாக்டர்கள், ஊழியர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
இவ்வாறு நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் கொரோனா நேற்று முன்தினம் வரையில் 350 ஆக இருந்தது. நேற்றும் பலர் பாதிக்கப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 400-ஐ நெருங்கி வருகிறது.

Related Tags :
Next Story