திண்டிவனத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம்


திண்டிவனத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 18 July 2020 4:48 AM GMT (Updated: 18 July 2020 4:48 AM GMT)

திண்டிவனத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடந்தது.

திண்டிவனம்,

திண்டிவனத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். இதில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி. சிங், திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, திண்டிவனம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாந்தகுமாரி, திண்டிவனம் நகராட்சி பொறுப்பு ஆணையாளர் ஸ்ரீ பிரகாஷ் மற்றும் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.

ஆய்வு

கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், திண்டிவனம் நகரில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திண்டிவனம் நகரம் கிடங்கல், ரோசனை பாட்டை, பழைய நகராட்சி அலுவலகம், சஞ்சீவிராயன்பேட்டை, செஞ்சி, வானூர் ஆகிய பகுதிகளில் கொரோனா சிறப்பு முகாம் மேற்கொள்ள வேண்டும்.

திண்டிவனம் நகரம் முழுவதும் காலை மற்றும் மாலையில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து அவர், பழைய நகராட்சி கட்டிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டார்.

Next Story