கடலூரில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் ரஜினி மக்கள் மன்றத்தினர் கோரிக்கை


கடலூரில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் ரஜினி மக்கள் மன்றத்தினர் கோரிக்கை
x
தினத்தந்தி 18 July 2020 4:53 AM GMT (Updated: 2020-07-18T10:23:13+05:30)

கடலூர் தெற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் ஓ.எல்.பெரியசாமி கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.

கடலூர்,

கடலூர் தெற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் ஓ.எல்.பெரியசாமி கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், கடலூர் மாவட்டத்தில் ஏதாவது பெரிய அளவில் பேரிழப்பு ஏற்பட்டால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கோ அல்லது விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரிக்கோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட கடலூரில் மருத்துவகல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அப்போது மாவட்ட இணை செயலாளர் ஆசை தாமஸ், துணை செயலாளர் எம்.ஜி.ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர் ஆர்.வி.வெங்கடேசன், தொழிலாளர் அணி செயலாளர் தண்டபாணி, வர்த்தக அணி இணை செயலாளர் மாணிக்கம், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர் குடிகாடு கருணாகரன், கடலூர் பன்னீர்செல்வம், மேல்பட்டாம்பாக்கம் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story