திருப்பூர் மாநகர பகுதியில் கடைகள் இரவு 9 மணிக்கு மேல் திறந்து இருந்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் போலீசார் எச்சரிக்கை
திருப்பூர் மாநகர பகுதியில் கடைகள் இரவு 9 மணிக்கு மேல் திறந்து இருந்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன் பூட்டி ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
திருப்பூர்,
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) திருப்பூர் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. நள்ளிரவு 12 மணி முதல் இன்று நள்ளிரவு 12 மணி வரை கடைகள் உள்ளிட்ட எந்தவித வணிக நிறுவனங்களையும் திறக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகர பகுதிகளில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தங்கள் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட அனைத்து வணிகர்கள், கடைக்காரர்கள், இறைச்சி, மீன் கடைக்காரர்கள், பேக்கரி, டீக்கடைகள், ஜவுளி, நகைக்கடை உள்ளிட்ட சங்க நிர்வாகிகளை அழைத்து நேற்று கூட்டம் நடத்தப்பட்டது.
ரூ.10 ஆயிரம் அபராதம்
திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜவுளி வியாபாரிகள், அனைத்து வகையான கடைகள், இறைச்சி, மீன் கடைக்காரர்கள், பேக்கரி, ஓட்டல் உரிமையாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், இன்று முழு ஊரடங்கு என்பதால் அனைத்து கடைகளையும் நள்ளிரவு 12 மணி வரை அடைக்க வேண்டும். நாளை(திங்கட்கிழமை) முதல் ஜவுளிக்கடை உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளையும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும்.
இரவு 9 மணிக்கு மேல் கடைகள் திறந்து இருந்தால் பறக்கும் படை குழு ஆய்வு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும். 7 நாட்களுக்கு பிறகே ‘சீல்’ வைக்கப்பட்ட கடையை திறக்க முடியும். கடைகளை தினமும் 2 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஏ.சி.யை பயன்படுத்தக்கூடாது.
கடையின் முன்புறம் கிருமிநாசினி வைக்க வேண்டும். அனைத்து பணியாளர்களும் அவசியம் தரமான முககவசம் அணிய வேண்டும். முககவசம் அணியாத வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதித்தது தெரியவந்தால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும். 4 அடி சமூக இடைவெளியை கடைக்குள் கடைபிடிக்க வேண்டும். கடைகளில் மக்கள் கை அதிகமாக படும் இடங்களை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். நோய் பரவல் அதிகரித்து வருவதால் விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
விழிப்புணர்வு பலகை
மேலும் ஒவ்வொரு கடைகளுக்கு முன்பும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பலகைகளை கட்டாயம் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதுபோல் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் அனைத்து வணிகர்கள், கடைக்காரர்களுக்கு கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story