நிலக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்
நிலக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம் செய்தனர்.
நிலக்கோட்டை,
நிலக்கோட்டை ஒன்றியம் நூத்துலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது சின்னமநாயக்கன்கோட்டை காலனி. இங்கு வசிக்கிற மக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த 20 நாட்களாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் செய்தனர். இருப்பினும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
போராட்டம்
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள், காலிக்குடங்களுடன் அங்குள்ள குடிநீர் குழாய் அருகே திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி பிரதிநிதிகள் அங்கு விரைந்து சென்று, அதிகாரிகளிடம் பேசி சின்னமநாயக்கன்கோட்டை காலனிக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story