இறால் பண்ணையை அகற்றக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


இறால் பண்ணையை அகற்றக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

முத்துப்பேட்டை அருகே குன்னலூர் பகுதியில் இறால் பண்ணையை அகற்ற வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை அருகே குன்னலூர் பகுதியில் இறால் பண்ணையை அகற்ற வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் குன்னலூர் ஊராட்சி கடம்பவிளாகம் பகுதியில் நிலமற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட நிலப்பட்டாவை திரும்ப பெற்றுத்தர வேண்டும். வெள்ள பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அப்பகுதியில் தனியார் இறால் பண்ணை குட்டைக்காக உயர்த்தப்பட்டுள்ள சுவர் போன்ற கரையை அகற்ற வேண்டும். விவசாயிகளின் நிலப்பட்டாவை திரும்ப பெற்றுத்தருவதோடு விவசாய பாதிப்பை ஏற்படுத்தும் இறால் பண்ணையை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story