திருவாரூரில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் சாவு பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
திருவாரூரில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் இறந்தார். இதன் காரணமாக பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 860 பேர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த 39 வயதான நபர் விபத்தில் காயம் அடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கொரோனா வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
89 பேர் ‘டிஸ்சார்ஜ்’
பேரளம் பகுதியை சேர்ந்த பெண் வருவாய் ஆய்வாளர், அவருடைய கணவர் ஆகிய இருவருக்கும் கொரோனா இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் மன்னார்குடி பகுதியை சேர்ந்த 8 பேர், குடவாசல் பகுதியை சேர்ந்த 7 பேர், கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஆகிய பகுதியை சேர்ந்த தலா 3 பேர், திருவாரூர், வலங்கைமான் பகுதியை சேர்ந்த தலா ஒருவர் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 35 பேருக்கு நேற்று கொரோனா நோய் தொற்று உறுதியானது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 895 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 89 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்ட நிலையில் 251 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :
Next Story