காரைக்காலில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 127 ஆக உயர்வு


காரைக்காலில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 127 ஆக உயர்வு
x
தினத்தந்தி 20 July 2020 8:38 AM IST (Updated: 20 July 2020 8:38 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.

காரைக்கால்,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை காரைக்காலில் 4,224 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 15-ந் தேதி, 16-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மட்டும் 452 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 341 பேருக்கு முடிவுகள் வந்துள்ளது.

இதில் காரைக்காலை சேர்ந்த 4 பேருக்கும், நெடுங்காடு, திருமலைராயன்பட்டினம், விழிதியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கும் என மொத்தம் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 78 பேர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பி உள்ளனர்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகள் நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு மருத்துவ கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. காய்ச்சல், சளி இருந்தாலும் அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும் என்றும், தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும் மாவட்ட நலவழித்துறை அறிவுறுத்தி உள்ளது. 

Next Story