திருப்பூரில் பலத்த காற்றுடன் மழை
திருப்பூரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
திருப்பூர்,
திருப்பூர் மாநகரில் நேற்று காலை தூறலுடன் மழை பெய்தது. அதன்பிறகு வெயில் கொளுத்தியது. பின்னர் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது.
தென்னம்பாளையம், கே.செட்டிப்பாளையம், மண்ணரை, முத்தனம்பாளையம், ராயபுரம், காலேஜ்ரோடு, லட்சுமிநகர், என்.ஆர்.கே.புரம், மாநகராட்சி அலுவலக பகுதி உள்பட மாநகர் முழுவதும் பரவலாக மழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் மரக்கிளைகள் முறிந்து ரோட்டில் விழுந்தன.
மின்தடை
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு அமர்ஜோதி கார்டன் பகுதியில் 5 மணி அளவில் வேப்பமரம் சரிந்து மின்கம்பத்தில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி எந்திரங்கள் மூலமாக மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.
மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. திருப்பூர் கல்லம்பாளையம் ரெயில்வே ஒற்றைக்கண் பாலத்தின் கீழ் அதிகமாக மழைநீர் தேங்கியது.பிரதான சாலைகளில் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதனால் மாலையில் மாநகரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
குன்னத்தூர்
குன்னத்தூரில் கடந்த 2 நாட்கள் வெயில் இல்லாமல் மேக மூட்டமாக காணப்பட்டது. நேற்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயில் வாட்டி எடுத்தது. ஆனால் மாலை 4 மணிக்கு மேல் வானில் கருமேகம் சூழ்ந்தது. பின்னர் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

Related Tags :
Next Story