திருவாரூர் மாவட்டத்தில் டாக்டர் உள்பட 46 பேருக்கு கொரோனா


திருவாரூர் மாவட்டத்தில் டாக்டர் உள்பட 46 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 July 2020 6:20 AM IST (Updated: 21 July 2020 6:20 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் டாக்டர் உள்பட 46 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 941 ஆக உயர்வு.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 895 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதில் நேற்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் ஒருவர் மற்றும் திருவாரூர் ஊர்காவல் படையில் பணியாற்றும் 2 பேர் ஆகியோருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் வலங்கைமான் ஆவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த ஊழியர், மன்னார்குடி தனியார் மருத்துவமனை ஊழியர் உள்பட 5 பேர், முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர், திருவாரூர் பகுதியை சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தை உள்பட 2 பேர், கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த 4 பேர், நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த 3 பேர்், குடவாசல் பகுதியை சேர்ந்த 2 பேர், வலங்கைமான் பகுதியை சேர்ந்த ஒருவர் உள்பட 46 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 941 ஆக உயர்ந்துள்ளது.

Next Story