கோவை மாவட்டத்தில் போலீசார் உள்பட 139 பேருக்கு கொரோனா தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையம் மூடல்
கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் போலீசார் உள்பட 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
கோவை,
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் பணிபுரிந்த நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.
கடந்த வாரம் வருமானவரித்துறை அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்த அலுவலகத்தில் பணிபுரியும் 32 வயது ஆண் அலுவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கிணத்துக்கடவு விவசாய உபகரணங்கள் மற்றும் விதைகள் விற்பனை செய்து வந்த நிறுவனத்தில் பணிபுரிந்த 4 ஊழியர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டது.
139 பேருக்கு கொரோனா
சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர், லேப் டெக்னீசியன் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோவை சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் 45 வயது ஆண் காவலர், மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு காவலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அன்னூரை சேர்ந்த 21 வயது பெண், 44 வயது பெண், 23 வயது பெண், 21 வயது பெண் ஆகியோருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பெரியநாயக்கன்பாளையத்தில் 7 பேர், ரத்தினபுரி 5 பேர், ரங்கேகவுடர் வீதி 6 பேர், தெலுங்கு வீதி 5 பேர் என நேற்று ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் 87 ஆண்கள், 52 பெண்கள் என மொத்தம் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கோவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,183 ஆக உயர்ந்து உள்ளது. கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரி, கொடிசியா கொரோனா சிகிச்சை மையம் உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை பெற்று வந்த 72 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 1,245 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு, ஒரு பெண் போலீஸ் உள்பட 3 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. தற்காலிகமாக காமராஜர் கலையரங்கத்தில் செயல்பட்டு வருகிறது.ஏற்கனவே கோவையில் போத்தனூர், மதுக்கரை, துடியலூர், சூலூர், உக்கடம் போலீஸ் நிலையங்களில் பணியாற்றிய போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ள நிலையில் தற்போது தொண்டாமுத்தூர் போலீஸ் நிலைய போலீசாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது போலீசாரிடையே அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story