கோவில்பட்டியில் 4 இறைச்சி கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு


கோவில்பட்டியில் 4 இறைச்சி கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 27 July 2020 6:05 AM IST (Updated: 27 July 2020 6:05 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் முழு ஊரடங்கை மீறி செயல்பட்ட 4 இறைச்சி கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

கோவில்பட்டி,

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, இந்த மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மருந்து கடைகள், பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

இந்த நிலையில் கோவில்பட்டியில் முழு ஊரடங்கை மீறி நேற்று சில இறைச்சி கடைகளில் விற்பனை நடைபெறுவதாக, தாசில்தார் மணிகண்டனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவரது தலைமையில் அதிகாரிகள், கோவில்பட்டியில் உள்ள இறைச்சி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

4 இறைச்சி கடைகளுக்கு சீல் வைப்பு

அப்போது கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள ஆட்டு இறைச்சி கடையில், கதவை பாதியளவு திறந்து வைத்து, இறைச்சி விற்பனை நடைபெற்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்த கடையை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். அந்த கடையின் உரிமையாளர், விற்பனையாளர்கள் ஆகிய 5 பேரை கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதேபோன்று கோவில்பட்டி பார்க் ரோடு பகுதியில் உள்ள 3 இறைச்சி கடைகளிலும் கதவுகளை உள்பக்கமாக பூட்டி கொண்டு இறைச்சி விற்பனை செய்தனர். இதையடுத்து அந்த 3 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். அந்த கடைக்காரர்கள் 3 பேரையும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Next Story