அவசர சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கருப்பு கொடி ஏந்தி வைகோ ஆர்ப்பாட்டம்
சென்னை அண்ணாநகரில் உள்ள தன்னுடைய இல்லத்தின் முன்பு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நேற்று கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை,
விவசாயத்தை அழித்து, வேளாண் தொழிலில் இருந்து விவசாயிகளை வெளியேற்றக்கூடிய வகையில் கொண்டுவரப்பட்டிருக்கும் அவசர சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, சென்னை அண்ணாநகரில் உள்ள தன்னுடைய இல்லத்தின் முன்பு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நேற்று கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், தென்சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சைதை ப.சுப்பிரமணி, வடசென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.சி.ராஜேந்திரன், தென்சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கழககுமார், சிறுபான்மை பிரிவுச்செயலாளர் முராத் புகாரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story