மும்பை, தானேயில் பலத்த மழை தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது துல்சி ஏரி நிரம்பியது
மும்பை, தானேயில் நேற்று பலத்த மழையால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. மழை காரணமாக மும்பைக்கு குடிநீர் வழங்கும் துல்சி ஏரி நிரம்பியது.
மும்பை,
மராட்டியத்தில் பருவ மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் மும்பையில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் மும்பையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் பலத்த மழை பெய்தது. இந்த மழை காலை வரை தொடர்ந்தது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வடலா உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு கட்டிடங்களிலும் மழைநீர் புகுந்தது.
இதேபோல சாலைகளிலும் பெரும்பாலான இடங்களில் இடுப்பு அளவுக்கு வெள்ளம் தேங்கியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை காரணமாக சாலையில் தேங்கிய வெள்ளத்தால் வாஷி கழிமுக பாலம், மும்பை கிழக்கு, மேற்கு விரைவு சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து மும்பை போக்குவரத்து போலீசார் கூறுகையில், “மழை காரணமாக ஒர்லி நாக்கா, லால்பாக், மும்பை சென்ட்ரல், மகாலெட்சுமி கோவில், ஒர்லி கான் அப்துல் காபர் கான் மார்க் உள்ளிட்ட பகுதிகளில் மூட்டு அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது” என்றனர்.
இதேபோல பைகுல்லா போலீஸ் நிலையம், இந்துமாதா அருகில் பெருகிய வெள்ளத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது என அதிகாரி ஒருவர் கூறினார்.
துல்சி ஏரி நிரம்பியது
நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மும்பை நகரில் 5.7 செ.மீ. மழையும், புறநகரில் 2.9 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்தநிலையில் பலத்த மழை காரணமாக மும்பைக்கு குடிநீர் வழங்கும் துல்சி ஏரி நிரம்பியது. மும்பை தவிர தானே, நவிமும்பை பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது.
இந்தநிலையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மும்பை, தானே மண்டலங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி கோசாலிகர் டுவிட்டரில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story