சுங்குவார்சத்திரம் அருகே தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை பெயிண்டர் கைது
சுங்குவார் சத்திரம் அருகே தலையில் கல்லைப்போட்டு தொழிலாளியை கொலை செய்ததாக பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த காந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் (வயது 50). மரம் வெட்டும் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (32). பெயிண்ட்ராக வேலை செய்து வந்தார்.
பூபாலன் நேற்று மாலை காந்தூர் பகுதியில் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரமேஷ், குடிபோதையில் வந்து கொண்டிருந்தார். அப்போது ரமேசுக் கும், பூபாலனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
கொலை
இதில் குடிபோதையில் இருந்த ரமேஷ் அருகே இருந்த கல்லை எடுத்து பூபாலனின் தலையில் போட்டார். இதில் பலத்த காயம் அடைந்த பூபாலன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பூபாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story