திருச்செந்தூரில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


திருச்செந்தூரில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 July 2020 2:27 AM IST (Updated: 30 July 2020 2:27 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு அனைத்து இந்திய வாகன ஓட்டுனர்கள் பேரவை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு அனைத்து இந்திய வாகன ஓட்டுனர்கள் பேரவை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பட்டாணி தலைமை தாங்கினார்.

கொரோனா ஊரடங்கால் சுற்றுலா வாகன டிரைவர்கள், வாகன உரிமையாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். எனவே சாலை வரி, வாகன ஓட்டுனர் உரிமம், தகுதிச்சான்று புதுப்பிக்க மத்திய அரசு வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை கால நீட்டிப்பு வழங்கி உள்ளது. அதேபோன்று தமிழக அரசும் காலநீட்டிப்பு வழங்க வேண்டும். வாகன டிரைவர்கள், உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஒன்றிய பொறுப்பாளர்கள் குமார், செல்வம், கோபி, நகர பொறுப்பாளர் ஜெயசிங் உள்பட திரளான டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story