கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.
கோவில்பட்டி,
கோவில்பட்டி ஏ.கே.எஸ். தியேட்டர் ரோடு பகுதியில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கு சாலையின் அகலம் குறைவாக அமைக்கப்பட்டு உள்ளது என்று கூறி, அப்பகுதி மக்கள் நேற்று கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம், நகரசபை ஆணையாளர் ராஜாராம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், அரசு அனுமதித்த 6½ மீட்டர் அகலத்தில்தான் புதிய சாலை அமைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
ஊத்துக்கோட்டையில் வெள்ளத்தில் சேதமடைந்த தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு 2 மாதத்துக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.