முன்னாள் நகர்மன்ற தலைவர் மகராஜாபிள்ளை படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு


முன்னாள் நகர்மன்ற தலைவர் மகராஜாபிள்ளை படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 31 July 2020 12:06 AM GMT (Updated: 31 July 2020 12:06 AM GMT)

நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில், பாளையங்கோட்டை முன்னாள் நகர்மன்ற தலைவர் மகராஜாபிள்ளை பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

நெல்லை,

நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில், பாளையங்கோட்டை முன்னாள் நகர்மன்ற தலைவர் மகராஜாபிள்ளை பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், மகராஜாபிள்ளை படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story