மாவட்ட செய்திகள்

ரூ.50 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் + "||" + Rettyarpatti Narayanan MLA to construct Darsala at a cost of Rs. 50 lakhs Started

ரூ.50 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

ரூ.50 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
களக்காடு பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்க வலியுறுத்தி, ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ.விடம் பொதுக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இட்டமொழி,

களக்காடு பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்க வலியுறுத்தி, ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ.விடம் பொதுக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 14-வது நிதிக்குழு மானியம் மூலமாக, களக்காடு வடக்கு ரதவீதி, தெற்கு ரதவீதிகளில் ரூ.50 லட்சத்தில் தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழா நடந்தது. ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், களக்காடு நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் சுஷ்மா, உதவி பொறியாளர் விஜயகுமார், நகர செயலாளர்கள் செல்வராஜ் (களக்காடு), பாபு (ஏர்வாடி), மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சிந்தாமணி ராமசுப்பு, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோக்குமார், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் சாலமோன், நகர மகளிரணி செயலாளர் ஐஸ்வர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


முன்னதாக, ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ., மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பருத்திப்பாடு ஊராட்சிக்கு உட்பட்ட மறவன்குளம், காலனி தெரு ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஓட்டப்பிடாரத்தில் ரூ.20 லட்சம் வளர்ச்சி திட்ட பணிகள் சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
ஓட்டப்பிடாரத்தில் ரூ.20 லட்சம் வளர்ச்சி திட்ட பணிகள் சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.