குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரி இந்து முன்னணியினர் போராட்டம்
குண்டும், குழியுமான சாலையை சீரமைக்ககோரி இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி,
காரைக்குடி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த பணியானது பெரும்பாலான இடங்களில் நிறைவு பெற்று ஒரு சில இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காரைக்குடி முதல் பீட் பகுதியில் இந்த பணிக்காக சாலையில் குழிகள் தோண்டப்பட்டு பணி நிறைவு பெற்றது. இதன் பின்னர் இந்த சாலையானது குண்டும், குழியுமாக காணப்பட்ட நிலையில் மழைக்காலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் இந்த சாலையை சீரமைக்ககோரி நேற்று இந்து முன்னணியினர் அக்னிபாலா தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் பூச்செடிகளுடன் அங்கு வந்து குண்டும், குழியுமான சாலையில் நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story