மராட்டியத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியது


மராட்டியத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 31 July 2020 7:28 PM GMT (Updated: 31 July 2020 7:28 PM GMT)

மராட்டியத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதில் நேற்று மாநிலத்தில் 10 ஆயிரத்து 320 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 118 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 158 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை மாநிலத்தில் 60.68 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 1 லட்சத்து 50 ஆயிரத்து 662 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் மேலும் 265 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் நோய் தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 994 ஆகி உள்ளது.

மும்பை, புனே நிலவரம்

தலைநகர் மும்பையில் புதிதாக 1,085 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 284 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல மேலும் 53 பேர் பலியானதால் நகரில் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 353 ஆக அதிகரித்து உள்ளது.

மும்பையில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 76 நாட்களாக உள்ளது. தற்போது நகரில் 617 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. 5 ஆயிரத்து 313 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

புனே மாநகராட்சி பகுதியில் 1,635 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதன் மூலம் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்து 559 ஆக அதிகரித்து உள்ளது. அங்கு இதுவரை 1,440 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Next Story