பாகூர் பகுதியில் பலத்த மழை தாழ்வான குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நகர பகுதியை காட்டிலும் புறநகர் பகுதியில் அதிகளவு மழை பதிவானது.
பாகூர்,
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நகர பகுதியை காட்டிலும் புறநகர் பகுதியில் அதிகளவு மழை பதிவானது. இந்த நிலையில் வளிமண்டல மேல்அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று மாலை புதுச்சேரி நகர பகுதியில் இடி இடித்து மழைக்கான அறிகுறி தென்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் புறநகர் பகுதியான பாகூர், கன்னியக் கோவில், கிருமாம்பாக்கம், ரெட்டிச்சாவடி பகுதிகளில் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை பலத்த மழை கொட்டியது. திடீரென்று பெய்த மழையால் மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள் நனைந்தபடி சென்றனர். சாலையோர பள்ளங்களில் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. பரிக்கல்பட்டு கிராமத்தில் தாழ்வான குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story