சாலையின் குறுக்கே மாடு வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த ஊழியர் சாவு


சாலையின் குறுக்கே மாடு வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த ஊழியர் சாவு
x
தினத்தந்தி 5 Aug 2020 6:56 AM IST (Updated: 5 Aug 2020 6:56 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே சாலையின் குறுக்கே மாடு வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர், மனைவி கண்எதிரே பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் நீரவலூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோகன் (வயது 52). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி அமுதா(48). நேற்று முன்தினம் அசோகன், தனது மனைவி அமுதாவை அழைத்துக்கொண்டு தனது உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

திருவள்ளூரை அடுத்த முதுகூர் சாலையில் வந்தபோது, திடீரென சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்தது. இதனால் நிலைதடுமாறிய அசோகனின் மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் இருந்த கல் மீது மோதியது

சாவு

இதில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் படுகாயம் அடைந்த அசோகன், மனைவி கண்எதிரேயே அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அமுதாவை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story