வடக்கன்குளத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பணம் திருட்டு


வடக்கன்குளத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பணம் திருட்டு
x
தினத்தந்தி 5 Aug 2020 7:11 AM IST (Updated: 5 Aug 2020 7:11 AM IST)
t-max-icont-min-icon

வடக்கன்குளத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்று விட்டனர். வீட்டின் உரிமையாளார் 100 பவுன் நகைகளை உறவினர் வீட்டில் கொடுத்து சென்றதால் 100 பவுன் நகை தப்பியது.

வடக்கன்குளம்,

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர் பேரின்ப ராஜ். இவர் வெளிநாட்டில் உள்ள தனியார் ஆயுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி மற்றும் மகள் மோனிகாசோனி இருவரும் வடக்கன்குளம் அமிர்தம் நகரில் உள்ள அவர்களுக்கு சொந்தமான வீட்டில் வசிக்கின்றனர். சம்பவத்தன்று இருவரும் தெற்கு கள்ளிகுளத்தில் நடைபெற்று வரும் அதிசய பனிமாதா ஆலய திருவிழாவிற்காக உறவினர்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர். இதையறிந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு உண்டியலில் இருந்த ரூ.5 ஆயிரத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

100 பவுன் தப்பியது

அடுத்த மாதம் மோனிகா சோனி திருமணம் நடக்க இருக்கிறது. இதற்காக வீட்டில் இருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணத்தை முன்னெச்சரிக்கையாக அவர்களது உறவினர் வீட்டில் பாதுகாப்பாக கொடுத்துவிட்டு சென்றிருந்தனர். இதனால் மர்ம நபர்களிடம் இருந்து நகையும், பணமும் கொள்ளை போகாமல் தப்பியது. இதுகுறித்து பணகுடி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story