காஞ்சீபுரம் மாவட்டத்தில் 167 பேருக்கு தொழில் தொடங்க கொரோனா சிறப்பு நிதிஉதவி


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 167 பேருக்கு தொழில் தொடங்க கொரோனா சிறப்பு நிதிஉதவி
x
தினத்தந்தி 5 Aug 2020 9:39 PM GMT (Updated: 5 Aug 2020 9:39 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 167 பேருக்கு தொழில் தொடங்க கொரோனா சிறப்பு நிதிஉதவி கலெக்டர் தகவல்.

காஞ்சீபுரம்,

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாரா துறைகளை சேர்ந்த உற்பத்தியாளர்கள் இணைந்த கூட்டமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு தொழில் தொடங்க உள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் கொரோனா கால ஊரடங்கால் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை சேர்ந்த 167 இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்காக வெளியூருக்கு புலம் பெயர்ந்து கொரோனாவால் மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் தொழில் தொடங்குவதற்காக, ஊராட்சிகளில் செயல்படும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலம் தலா ரூ.1 லட்சம் வரை தொழில் கடன் நீண்ட கால கடனாக வழங்கப்பட உள்ளது.

இந்த நிதியை பெற புலம் பெயர்ந்து சொந்த ஊருக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் திரும்பிய 18 வயது முதல் 35 வயது உள்ள ஆண்களும், 18 முதல் 40 வயது வரையுள்ள பெண்களும் தொழில் கடன் தொடங்குவதற்கு தங்களின் ஊராட்சிகளில் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்க அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் பெற கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story