கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு விவசாயி பலி: மேலும் 139 பேருக்கு தொற்று


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு விவசாயி பலி: மேலும் 139 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 8 Aug 2020 1:05 PM IST (Updated: 8 Aug 2020 1:05 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு விவசாயி பலியானார். மேலும் 139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 131 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 30 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 3 ஆயிரத்து 335 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த 50 வயது விவசாயி ஒருவர் காய்ச்சல் காரணமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் நேற்று 400-க்கும் மேற்பட்டோரின் பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் 130 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 270 ஆக உயர்ந்துள்ளது.


Next Story