மும்பையில் மேலும் 1,304 பேருக்கு கொரோனா


மும்பையில் மேலும் 1,304 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 Aug 2020 3:42 AM IST (Updated: 9 Aug 2020 3:42 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் மேலும் 1,304 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.58 பேர் உயிரிழந்தனர்.

மும்பை,

மும்பையில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்து உள்ளது. நகரில் புதிதாக 1,304 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நகரில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 316 ஆக உயர்ந்து உள்ளது.

இதில் 95 ஆயிரத்து 354 பேர் குணமடைந்து விட்டனர். தற்போது 19 ஆயிரத்து 914 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நகரில் குணமானவர்கள் சதவீதம் 78 ஆக உள்ளது.

58 பேர் பலி

இதேபோல மும்பையில் மேலும் 58 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இதில் 37 பேர் ஆண்கள். 21 பேர் பெண்கள். இதுவரை 6 ஆயிரத்து 751 பேர் பலியாகி உள்ளனர்.

மும்பையில் நோய் பரவல் இரட்டிப்பு ஆகும் காலம் 89 நாட்களாக உள்ளது. நகரில் தற்போது 582 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. 5 ஆயிரத்து 396 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

Next Story