மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 17 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 396 பேர் பாதிப்பு + "||" + In Tiruvallur district, the corona infection has crossed 17,000 and affected 396 people in a single day

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 17 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 396 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 17 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 396 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 396 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது.
திருவள்ளூர், 

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 25 பேர், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 33 பேர் உள்பட திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 396 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை 17ஆயிரத்து 13 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர் களில் 13 ஆயிரத்து 214 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 3,513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 6 பேர் பலியானதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 286 ஆனது.

வண்டலூர்

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஊனைமாஞ்சேரி ஊராட்சியில் உள்ள சோழன் தெருவில் வசிக்கும் 12 பேர், பெருமாள்கோவில் தெருவை சேர்ந்த 63 வயது மூதாட்டி, 52 வயது பெண், இந்திராகாந்தி தெருவை சேர்ந்த 21 வயது இளம்பெண் உள்பட 29 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதியில் 2 பேர், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 397 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 811 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 14 ஆயிரத்து 776 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று ஒரே நாளில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்தது. 2,728 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 27, 23 வயதுடைய வாலிபர்கள், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 68 வயது மூதாட்டி, சோமங்கலம் பகுதியை சேர்ந்த 64 வயது முதியவர், ஒரகடம் பகுதியை சேர்ந்த 24, 22 வயது வாலிபர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 393 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 807 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 8 ஆயிரத்து 938 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 5 பேர் பலியானதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்தது. 2,718 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் மாவட்டம் முழுவதும் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 142 பேருக்கு கொரோனா
வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 142 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 621 ஆக உயர்ந்தது.
2. வாணியம்பாடியில் கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி
வாணியம்பாடியில் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலியானார். அவருக்கு போலீஸ் சூப்பிரண்டு அஞ்சலி செலுத்தினார்.
3. கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி டாக்டர் உள்பட 256 பேருக்கு தொற்று உறுதி
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியானார்கள். டாக்டர் உள்பட 256 பேருக்கு தொற்று உறுதியானது.
4. திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 8 பேர் பலி மேலும் 282 பேருக்கு தொற்று உறுதி
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலன் இன்றி பலியானார்கள். மேலும் 282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு: திண்டுக்கல்லில், காற்றில் பறந்த சமூக இடைவெளி
திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் சமூக இடைவெளியில்லாமல் பொதுமக்கள் கூடி நிற்பதால் கொரோனா தொற்று பரவ அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...