புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு: திராவிடர் விடுதலை கழகம் ஆர்ப்பாட்டம்
புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு: திராவிடர் விடுதலை கழகம் ஆர்ப்பாட்டம்.
புதுச்சேரி,
சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு 2020 சட்டம், புதிய கல்விக்கொள்கை போன்றவற்றுக்கு தமிழகம், புதுவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்த வகையில் நாள்தோறும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
புதுவையில் அண்ணா சிலை அருகே திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகநாதன், தமிழர் களம் அழகர், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் மங்கையர்செல்வன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர்படை பாவாடைராயன், இலக்கியப்பொழில் இலக்கிய மன்றம் பராங்குசம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story