கொரோனா நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு ரூ.25 கோடி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்
கொரோனா நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு ரூ.25 கோடி வழங்கி உள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுவையில் நாளுக்குநாள் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக இன்று (புதன்கிழமை) அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்துகிறார்.
ஏனாமில் கடந்த 3 நாட்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கு என்றால் மக்களுக்கு பிரச்சினை இருக்கும். தற்போது 2-வது கட்டமாக மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட உள்ளது. இந்த அரிசியை ரேஷன்கடைகள் மூலம் கொடுக்க முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன்.
ரூ.25 கோடி
ஆனால் கவர்னர் ஆசிரியர்களை வைத்து கொடுக்க கூறுகிறார். ரேஷன்கடைகள் மூலம் கொடுத்தால் 5 நாட்களில் அரிசியை வழங்கிவிடலாம். இதுதொடர்பாக முதல்-அமைச்சரிடம் மீண்டும் வலியுறுத்தப்படும். கொரோனா நிவாரண பணிகளுக்கு ரூ.50 கோடி வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு ரூ.25 கோடிதான் வழங்கி உள்ளது.
சுகாதார பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர், இயக்குனரிடம் பேசி உள்ளேன். 6 மாதத்துக்கு தேவையான மருந்துகள் வாங்கவும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மேலும் ரூ.25 கோடி வழங்க கடிதம் அனுப்ப உள்ளேன்.
தற்காலிக நியமனம்
கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு நாள்தோறும் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானவர்கள் வருகின்றனர். அவர்களை 45 நிமிடத்துக்குள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு அனுப்ப கூறி உள்ளேன். கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரிக்கு தேவையான பணியாளர்களை தற்காலிகமாக நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story