மராட்டியத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.300 குறைப்பு


மராட்டியத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.300 குறைப்பு
x
தினத்தந்தி 13 Aug 2020 3:06 AM IST (Updated: 13 Aug 2020 3:06 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.300 குறைக்கப்பட்டு உள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா தொற்று நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை நெருங்கியது. அதிக பரிசோதனையினால் மட்டுமே நோய் தொற்றை குறைக்க முடியும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. எனவே பரிசோதனை கட்டணத்தை குறைக்க மாநில அரசு ஆலோசித்து வந்தது. இதற்காக குழு ஒன்றையும் அமைத்து ஆய்வு செய்தது.

இந்த நிலையில் கொரோனா பரிசோதனை கட்டண குறைப்பு விவரத்தை நேற்று மராட்டிய அரசு அறிவித்தது. இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியதாவது:-

ரூ.300 குறைப்பு

கொரோனா பரிசோதனை கட்டணத்தை ரூ.300 வரை குறைத்து உள்ளோம். எனவே இனி பரிசோதனை நடத்தும் ஆய்வங்கங்கள் ரூ.1,900 மட்டுமே கட்டணத்தை வசூலிக்க வேண்டும். வீட்டுக்கு வந்து சளிமாதிரி சேகரிப்பது உள்ளிட்ட நேரங்களில் கட்டணங்கள் வேறுபடும். இதுபோன்ற சம்பவங்களில் கட்டணம் ரூ.2,200 மற்றும் ரூ.2,500 பெறலாம்.

பொதுமக்களின் நிதி சுமையை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story