சுற்றுலா வாகன டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


சுற்றுலா வாகன டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Aug 2020 3:55 AM IST (Updated: 14 Aug 2020 3:55 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் அனைத்து சங்க நல கூட்டமைப்பினர் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி, 

ஊரடங்கு காலத்தில் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படாததால் சாலை வரியை ரத்து செய்யவேண்டும், மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கவேண்டும், டீசல் விலை உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும், இ-பாஸ் நடைமுறை கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை சுற்றுலா வாகன டிரைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் அனைத்து சங்க நல கூட்டமைப்பினர் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிக அளவில் அவர்கள் கூடியதால் போலீசார் எச்சரித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகானிடம் அவர்கள் கொடுத்த மனுவில், வாகன தகுதி சான்று புதுப்பிக்க எளிமையான வழிமுறையை கடைபிடிக்க வேண்டும், 6 மாத ஊரடங்கு காலத்தில் காலாவதியான வாகன காப்பீட்டை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டித்து தரவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் இடம்பெற்று இருந்தன.

Next Story