மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்தது ஒரே நாளில் 119 பேர் உயிரிழப்பு + "||" + Corona impact in Tamil Nadu has crossed 3 lakh 20 thousand 119 people died in a single day

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்தது ஒரே நாளில் 119 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்தது ஒரே நாளில் 119 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்தது. ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய (வியாழக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 65 ஆயிரத்து 560 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,549 ஆண்கள், 2,286 பெண்கள் என மொத்தம் 5,835 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிநாடுகளில் இருந்து வந்த 2 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 23 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 236 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 741 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 989 பேரும், செங்கல்பட்டில் 453 பேரும், திருவள்ளூரில் 390 பேரும், குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரியில் 9 பேரும், நீலகிரியில் 7 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 33 லட்சத்து 75 ஆயிரத்து 596 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 355 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 226 ஆண்களும், 1 லட்சத்து 27 ஆயிரத்து 100 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 15 ஆயிரத்து 614 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 40 ஆயிரத்து 274 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

119 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 81 பேரும், தனியார் மருத்துவமனையில் 38 பேரும் என 119 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 18 பேரும், செங்கல்பட்டு, கோவை, நெல்லையில் தலா 7 பேரும், காஞ்சீபுரம், கன்னியாகுமரியில் தலா 6 பேரும், கடலூர், மதுரை, ராமநாதபுரம், சேலம், தேனி, திருவண்ணாமலையில் தலா 5 பேரும், திருவள்ளூர், தென்காசி, புதுக்கோட்டையில் தலா 4 பேரும், தஞ்சாவூர், திருப்பூரில் தலா 3 பேரும், விருதுநகர், திருச்சி, ராணிப்பேட்டை, நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கலில் தலா இருவரும், அரியலூர், சிவகங்கை, திருப்பத்தூர், திருவாரூர், வேலூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 30 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 5,397 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு 100-ஐ கடந்துள்ளது.

5,146 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 146 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,070 பேரும், செங்கல்பட்டில் 488 பேரும், காஞ்சீபுரத்தில் 290 பேரும் அடங்குவர். இதுவரையில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 459 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 53 ஆயிரத்து 499 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 867 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 726 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 3 ஆயிரத்து 831 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேரும் என மொத்தம் 5 ஆயிரத்து 886 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் புதிதாக ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 61 அரசு நிறுவனங்கள், 73 தனியார் நிறுவனங்கள் என 134 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் மாவட்டம் முழுவதும் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 142 பேருக்கு கொரோனா
வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 142 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 621 ஆக உயர்ந்தது.
2. வாணியம்பாடியில் கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி
வாணியம்பாடியில் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலியானார். அவருக்கு போலீஸ் சூப்பிரண்டு அஞ்சலி செலுத்தினார்.
3. கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி டாக்டர் உள்பட 256 பேருக்கு தொற்று உறுதி
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியானார்கள். டாக்டர் உள்பட 256 பேருக்கு தொற்று உறுதியானது.
4. திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 8 பேர் பலி மேலும் 282 பேருக்கு தொற்று உறுதி
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலன் இன்றி பலியானார்கள். மேலும் 282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு: திண்டுக்கல்லில், காற்றில் பறந்த சமூக இடைவெளி
திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் சமூக இடைவெளியில்லாமல் பொதுமக்கள் கூடி நிற்பதால் கொரோனா தொற்று பரவ அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...