விநாயகா் சதுா்த்தியையொட்டி கொங்கனுக்கு 182 சிறப்பு ரெயில்கள் மத்திய, மேற்கு ரெயில்வே அறிவிப்பு


விநாயகா் சதுா்த்தியையொட்டி கொங்கனுக்கு 182 சிறப்பு ரெயில்கள் மத்திய, மேற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2020 8:22 PM GMT (Updated: 14 Aug 2020 8:22 PM GMT)

விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பை- கொங்கன் இடையே 182 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய, மேற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

மும்பை, 

விநாயகர் சதுா்த்திக்கு ஆண்டுதோறும் மும்பையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கொங்கன் பகுதியில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்தநிலையில் அவர்களின் வசதிக்காக மும்பையில் இருந்து கொங்கன் பகுதிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய, மேற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

இதுகுறித்து மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று(சனிக்கிழமை) முதல் 162 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக கூறியுள்ளது. மேற்கு ரெயில்வே வருகிற 17-ந் தேதி முதல் 20 சிறப்பு ரெயில் சேவையை இயக்க உள்ளது.

சிறப்பு கட்டணம்

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் இன்று முதல் அடுத்த மாதம் 5-ந்தேதி வரை சி.எஸ்.எம்.டி.- சாவந்த்வாடி, எல்.டி.டி.- குடால், எல்.டி.டி.- ரத்னகிரி, எல்.டி.டி.- சாவந்த்வாடி இடையே இயக்கப்பட உள்ளது.

இதேபோல மேற்கு ரெயில்வேயில் நாளை மறுநாள் முதல் 27-ந் தேதி வரை மும்பை சென்ட்ரல்- சாவந்த்வாடி, பாந்திரா டெர்மினஸ்- குடால் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு ரெயில்கள் அனைத்தும் சிறப்பு கட்டணத்தில் இயக்கப்பட உள்ளன.

Next Story