கர்நாடகத்தில் புதிய உச்சம் தொட்டது ஒரே நாளில் 7,908 பேருக்கு கொரோனா பாதிப்பு 104 பேர் பலியான பரிதாபம்
கர்நாடகத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 7,908 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 104 பேர் பலியாகி உள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் ஏற்கனவே 2 லட்சத்து 3 ஆயிரத்து 200 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இந்த நிலையில், நேற்று ஒரேநாளில் புதிதாக 7,908 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்து 108 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 26 ஆயிரத்து 499 பேர் குணமடைந்து உள்ளனர். இதில், நேற்று மட்டும் 5 ஆயிரத்து 257 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 80 ஆயிரத்து 884 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று பெங்களூரு நகரில் 2,452 பேருக்கும், மைசூருவில் 291 பேருக்கும், கலபுரகியில் 229 பேருக்கும், தார்வாரில் 219 பேருக்கும், பல்லாரியில் 608 பேருக்கும், கொப்பலில் 162 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 307 பேருக்கும், பாகல்கோட்டையில் 171 பேருக்கும், உடுப்பியில் 322 பேருக்கும், உத்தரகன்னடாவில் 87பேருக்கும், பெலகாவியில் 334 பேருக்கும், விஜயாப்புராவில் 144 பேருக்கும், துமகூருவில் 185 பேருக்கும், மண்டியாவில் 163 பேருக்கும், ராய்ச்சூரில் 220 பேருக்கும், பீதரில் 97 பேருக்கும், தாவணகெரேயில் 351 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 39 பேருக்கும், சிக்பள்ளாப்பூரில் 42 பேருக்கும், கோலாரில் 81 பேருக்கும், குடகில் 60 பேருக்கும், சித்ரதுர்காவில் 77 பேருக்கும், சாம்ராஜ்நகரில் 61 பேருக்கும், ஹாசனில் 158 பேருக்கும், சிக்கமகளூருவில் 104 பேருக்கும், யாதகிரியில் 116 பேருக்கும், ராமநகரில் 87 பேருக்கும், ஹாவேரியில் 138 பேருக்கும், கதக்கில் 190 பேருக்கும், சிவமொக்காவில் 413 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
104 பேர் பலி
மேலும் கர்நாடகத்தில் நேற்று ஒரேநாளில் 104 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். பெங்களூருவில் 22 பேரும், பல்லாரியில் 9 பேரும், மைசூருவில் 10 பேரும், தார்வாரில் 8 பேரும், பல்லாரியில் 9 பேரும், தாவணகெரே, உடுப்பியில் தலா 7 பேரும், தட்சிண கன்னடாவில் 6 பேரும், பெலகாவி, கலபுரகி, கொப்பலில் தலா 5 பேரும், சிவமொக்காவில் 3 பேரும், சாம்ராஜ்நகர், ராய்ச்சூர், துமகூரு, ஹாசன், விஜயாப்புரா, ஹாவேரியில் தலா 2 பேரும், கதக், மண்டியா, சிக்கமகளூரு, பீதர், உத்தரகன்னடாவில் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர். இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 717 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று புதிய உச்சமாக 7,908 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story